Monday, 25 February 2013

நவக்ரஹங்கள்





சனீஸ்வரன்--ஆயுள்,விதி.எதிர் வரும் கஷ்டங்கள்


சூரியன்--தந்தை,தந்தைவழி சொத்து,


ராகு--யோகம் பெறுதல்,துரதிர்ஷ்டம்


சுக்ரன்-இன்பம்,சோர்விலா சுகம் ,களத்திரம்


Sunday, 17 February 2013

Hurdles in marriage?

No peace and happiness?

Loss in business?

Joint venture or partnership Issue in the business?

Hurdles in marriage?

Horoscope matching?

Are there any problems and confusions with family life?

No progress in education?

Do you want to know about your chances of going abroad and getting jobs abroad?

Do you have any confusion in your family?

Relax we can fix it. We analyse all your problems on the basis of your horoscope and give predictions and suggestions accordingly for your good future and a problem-free life.

Just Call or +917200086562 and share your problem.

Saturday, 16 February 2013


மாசி மகம் வருகிற பிப்ரவரி 25 திங்கட் கிழமை வருகிறது.

போன மாசம் தை பூசம் நிகழந்தது இப்போது மாசி மகம்

இவைகளை வெறும் சம்பிரதாயமான ஆலய வழிபாடு என்று கருதிவிடாமல், அர்த்தமும், அறிவும்,ஆற்றலும் ஆன்மீகமும், இணைந்த அற்புதமான தத்துவத்தின் வெளிப்பாடு, என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சூரியனும் சந்திரனும் அதிக அளவிலான ஆற்றலைக் வெளிப் படுத்தும் சமயங்களில் தான், முக்கிய சிறப்பு ஆலய வழிபாடுகள் நடத்தும் படியாக ஆகம விதிகள் அமைந்துள்ளன. அவற்றிற்கு வானியல் நிகழ்வுகளும் ஆதாரமாக துணை புரிகின்றன.

சூரியன் சிவ நாராயணன் வடிவம்
சந்திரன் சக்தி சொருபம்

சூரியன் ஆற்றலின் பெருக்கு
சந்திரன் எண்ணங்களின் எழுச்சி

சூரியன் ஆண்மை
சந்திரன் பெண்மை

சூரியன் தந்தை பித்ருகாரகன்
சந்திரன் பெண்மை மாத்ருகாரகன்

இந்த சூரியனும் சந்திரனும் வான வெளியில் உள்ள ரசி மண்டலத்தில் ஒவ்வொரு மாதமும் நேருக்கு நேராக வரும் பொது தான் பவுர்ணமி நிகழ்கிறது.

மாசி மகத்தில் சூரிய சந்திரன் இரண்டும்
`ஒளித் தொடர்பு கொள்ளும் பவுர்ணமி`
நாளில் தான் மாசி மகம் நிகழ்கிறது

சிவ அம்சமாக உள்ள சூரியணனின் ஒளிக் கதிர்களை, சக்தி அம்சமாக உள்ள சந்திரன் பெற்று மகிமை பெரும் நாளே மாசி மகம்.

இதனாலேயே சிவ சக்தி வழிபாடுகளும் மகத்துவம் பெறுகிறது

கும்பகோணம் எனப்படும் குடந்தையில், கும்பேசுவரர் ஆலய புண்ணிய தீர்த்ததில் நீராடுதல் உலகப் பிரசித்தம் ஆனதாகும்.

ஊழிக் காலத்தில் உலகம் முழுதும் அழிந்து உயிர்கள் ஒரு குடத்து நீரில் ஒடுக்கப் பட்டதாகவும், மீண்டும் புது யுகம் இந்த மாசி மக நாளில் தான் இறைவனால் அக் குடத்தில் இருந்து உயிர்கள் விடுவிக்கப் பட்டதாகவும்,
அக் குடத்தில் இருந்து தான் புத்துலகம் படைக்கப் பட்டதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

உயிர்களின் உருவகமான அந்த தெய்வீக குடத்து நீரின் அம்சம் குடந்தை மகாமக குளத்து நீரில் கலந்திருப் பதாக ஐதீகம்.

குடத்தில் உயிர்களை ஒடுக்கி மீண்டும் புத்திப்பித்து புத்துலகம் படைத்த நாளே மாசி மகம்.

இயற்க்கை சக்தியாக வெளிப்படும் தெய்வ அனுக் கிரகங்களை, ஏற்புடைய உகந்த காலங்களில், மானிடர்களின் உடலும் உள்ளமும், இயல்பாக இசைவு கொண்டு ஏற்கின்றன.

இயற்கையின் அருளாகிய சிறப்பு ஆற்றல்கள், நமக்குள் உட் புகுந்து இயங்கி, உன்னதம் தருவதாக அமைந்துள்ளது மாசி மகம். 

Sunday, 10 February 2013

.செவ்வாயோட உபயம் தான்.


என் கவுண்டர்:
லாக் அப் டெத்:
தீவிபத்து:
தீக்குளிப்பு:
தேச துரோகம்:
நில அபகரிப்பு:
குரூர மிருகங்களின் சஞ்சாரம்:
மின் கசிவு:
மின் பற்றாக்குறை:
மின் வினியோகத்தில் லைன் லாஸ்:
சாலை விபத்துகள்:
கூலிப்படைகள்:
ரத்தசோகை ,ரத்தக்கொதிப்பு:
மூலம்:
இதய நோய்கள் மற்றும் ஹார்ட் அட்டாக்:
கருக்கலைப்பு -கருச்சிதைவு:
கணவன் மனைவி இடையிலான விவகாரங்கள் கொலையில் முடிவது:
கள்ள தொடர்புகள் காரணமாய் கொலைகள்:
பட்டாசு தயாரிப்பில் விபத்துகள்:

Saturday, 9 February 2013

செவ் தோஷம்னா என்ன?


செவ் தோஷம்னா என்ன? 
ஜாதகத்துல செவ் 3,6,10,11 தவிர எங்கருந்தாலும் தோசம் தேன். செவ் தோசம்னா செவ் காரகமுள்ள மேட்டர்ல எல்லாம் பல்பு வாங்கறதுதேன். ஆனால் இதுனால எல்லாம் உசுரு போயிருமான்னு இன்னைக்கு பார்ப்போம்.


ஏற்கெனவே பல தடவை சொல்லியிருக்கேன். ஜாதகத்துல உள்ள ஒரே அம்சத்தை வச்சுக்கிட்டு பலன் சொல்லிரப்படாது. எல்லாத்தையும் கூட்டுக்கழிச்சுத்தேன் பலன் சொல்லனும்.. இப்படி பதிவுல போடறதை எல்லாம் வேத வாக்கா எடுத்துக்கிட்டு காபரா ஆயிரப்படாது.
உங்களுது என்ன லக்னம் / செவ் எந்தெந்த பாவங்களுக்கு ஆதிபத்யம் பெறுகிறார், லக்னத்துக்கு அவர் சுபரா -பாபரா அவர் நின்ற ராசியில அவருக்குள்ள பலம் என்ன? -அவரோட இன்னம் என்னென்ன கிரகம்லாம் சேர்ந்திருக்கு – அந்த கிரகங்களுக்கு அங்கன என்ன பலம் -செவ்வாயோட என்ன உறவு -அந்த கிரகங்களின் பார்வை எங்கன விழுது இப்படி ஆயிரத்தெட்டு மேட்டரை பார்த்தாகனும்.



இது ஜஸ்ட் ஒரு பதிவு. ஒன்னமே தெரியாதவுகளுக்கு ஏதோ கொஞ்சமாச்சும் தெரியட்டும்னு செய்ற விஷய தானம்.
வடிவேலு சாம்பிள் வாங்கியே கடை வச்சுர்ராப்ல சிலரு நாம இங்கன போடற நுனிப்புல் பதிவுகளையே சுட்டு -காப்பி பேஸ்ட் எல்லாம் பண்றாய்ங்க.
அதனால ச்சொம்மா மேட்டரை தெரிஞ்சுக்க படிங்க. ரோசிங்க. எல்லாத்தையும் கூட்டிக்கழிச்சு அப்பாறம் தேன் முடிவுக்கு வரனும். ஓகேவா..



1.லக்ன செவ்:
சான்ஸ் ..இருக்கு. செவ் காரகங்களான மின்சாரம், நெருப்பு,கூர்மையான ஆயுதங்கள்,கொம்புள்ள பிராணிகள் வகையறாவுல ஆபத்து ஏற்படலாம். உடல் ரணமாகலாம் /எரியலாம்/கருகலாம். எதிரிகளால் தாக்குதல் கூட நடக்கலாம். செவ் லக்னத்துல நின்னா 4-7-8 பாவங்களை பார்ப்பாரு.
4 ஐ பார்ப்பதால் தாய்க்கு /தாயால் -வீட்டில்/வீட்டால் வாகனத்தில் /வாகனத்தால் தீங்கு ஏற்படலாம்.
7 ஐ பார்ப்பதால் காதலிக்கு/காதலியால் -மனைவிக்கு/மனைவியால் தீங்கு ஏற்படலாம்.
8 ஐ பார்ப்பதால் உயிருக்கு,இன உறுப்புக்கு பாதிப்பு ஏற்படலாம்.
2.தன பாவ செவ்:
இவர் ரெண்டுல இருக்கிறதால கண்,வாய்,தொண்டை பாதிக்கலாம். மானாவரியா காரம் திங்கற பழக்கம் இருக்கலாம்.
இவர் ஏழாம் பார்வையா எட்டை பார்க்கிறதால உசுருக்கு உலையும் வச்சுரலாம்.

4.மாத்ரு பாவ செவ்:
தாய்க்கு /தாயால் -வீட்டில்/வீட்டால் வாகனத்தில் /வாகனத்தால் தீங்கு ஏற்படலாம். இதுல என்ன ஒரு வில்லங்கம்னா வயசான காலத்துல ஹார்ட்டு புடுக்கலாம்.
5.புத்தி செவ்:
இது ஹை ரிஸ்கு . ஒரு கணத்துல அடுப்பங்கரையில நுழைஞ்சு தீக்குளிச்சுர்ர கேஸ். ஏற்கெனவே ஒன்னு ரெண்டு மிஸ் கேரி,அபார்சன் நடந்திருந்தா பரவால்லை. இல்லின்னா உ.உ க்கு வாய்ப்பிருக்கு.
7.களத்திர செவ்:
காதலிக்கு/காதலியால் -மனைவிக்கு/மனைவியால் தீங்கு ஏற்படலாம். செவ் காரகமுள்ள பெண்ணையே மணந்தால் ஓரளவு ஓவர்கம் பண்ணலாம்.
8.அஷ்டம செவ்:
இதுவும் ரிஸ்கான மேட்டருதேன். செவ் காரகங்களில் இருந்து விலகி வாழ்ந்தா தப்பலாம்.
9.பாக்ய செவ்:
இது அப்பா,அப்பா வழி சொத்துக்கு தீங்கு தரலாம். சொத்து மேட்டர்ல வில்லங்கமிருந்தா விட்டு கொடுத்து செட்டில் பண்ணிக்கிட்டு தூர வந்துர்ரது பெட்டர். தூரபயணங்களின் போது உல்வா பஸ்ஸு/ஸ்லீப்பர்களை தவிர்ப்பது நலலது .
12.விரய செவ்:
கொஞ்சம் அசால்ட்டா இருந்தாலும் நிலம் பறி போயிரும், போலீஸுக்கு கூலிப்படைக்கெல்லாம் செலவழிக்க வேண்டி வந்துரும். செலவானாலும் பரவால்லை. தூங்கற நேரம் பார்த்து அட்டாக் நடக்கவும் சான்ஸ் இருக்கு.