நாம் அனைவரும் வெற்றிகளைத் தறக்கூடிய விஜய வருட புத்தாண்டில் அடி எடுத்து வைக்கும்
நேரத்தில் நம் அனைவரும் கூடா நாளைப்(பிரபலாரிஷ்ட யோகம்) பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும் .
உலகத்தின் மிகப்பெரிய ஜோதிடர்கள் கூட அறியாத அறிய அற்புதமான விளக்கம்
இப்போது உங்கள் கையில் .
திருகயிலாயப் பொதியமுனிப் பரம்பரை 1001-வது குரு மஹா சந்நிதானம்
சக்தி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அடிமை சத்குரு
ஸ்ரீ-ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகள் அவர்களால் அருளப்பட்டதே கூட நாள் விளக்கம் ஆகும்
இதை அடியேன் இங்கு மிகவும் சுருக்கமாக தருகிறேன்
நாளும் கிழமையும் நமக்கு உதவி செய்வதைப்போல் நான்கு மனிதர்கள் கூட செய்யமாட்டார்கள் என்பது முதுமொழி .கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய சனாதன தர்மம் ஒன்றுதான் நாள்,கோள்,நட்சத்திரங்களின் மகிமையையும்,முக்கியத்துவத்தையு
ஞாயிறு -பரணி
திங்கள் -சித்திரை
செவ்வாய் -உத்திராடம்
புதன் -அவிட்டம்
வியாழன் -கேட்டை
வெள்ளி -பூராடம்
சனி -ரேவதி
மேற்கண்ட நட்சத்திரமும் ,கிழமையும் சேர்ந்தால் அது கூடா நாள் ஆகும் .இந்நாட்களில் திருமணம் ,கிரஹப்பிரவேசம் ,தொழில் துவக்கம் உட்பட எந்தவிதமான சுபகாரியமும்,கடன் கொடுத்தல் ,கடன் வாங்குதல்,நகை வாங்குதல் ,வெளியூர் பயணம் போன்ற அனைத்து சுப காரியங்களையும் கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும் .ஏனென்றால் கூடா நாட்கள் கேடு பயக்கும்.
மேலும் விரிவாக அறிய கூடநாள் விளக்கம் என்னும் அறிய நூல் சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீ தியில் "ஸ்ரீ அகஸ்திய விஜயம் "புத்தக கடையில் கிடைக்கும் விலை வெறும் இருபது ரூபாய் மட்டுமே
CONTACT NO: 044-2495 7276
மதுரை :0452-4376360
திருச்சி -95431-2436661
மேலூர் -9843209256
விஜய வருட கூடா நாட்கள்
28-05-2013,25-06-2013,26-06-20
09-09-2013,12-09-2013,21-09-20
குறிப்பு :அடியேனும் அணைத்து விஜய வருட பஞ்சாங்ககளிலும் தேடியபோது
வாசன் பஞ்சாங்கத்தில் அந்த நாளுக்குரிய யோகத்திர்க்கான கட்டத்தில் "பி" (பிரபலாரிஷ்ட யோகம்) என்று மட்டும் குறித்து இருந்தார்கள்.
2.கணித பாஸ்கரர் Prof .L V S மணி அவர்களின் "ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ கஞ்சி மடத்து ஆஸ்தான பாரத் கணித பஞ்சங்கத்தில்" "பி" (பிரபலாரிஷ்ட யோகம்) என்றும் குறித்து
பஞ்சங்கத்தின் 11 ஆம் பக்கத்தில் வருடத்தின் விரிவாக அனைத்து கூட நாட்களையும் குறிப்பிட்டதுடன அனைத்து சுப காரியங்ககளையும் தவிர்க்க வேண்டும் என்றும் எழுதிருந்தார்கள்.
மற்ற பஞ்சாங்களில் இதைப்பற்றி எந்த குறிப்பும் இல்லை என்பதை வேதனையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
நாம் அனைவரும் சுபச் செயல்களுக்கு கூட நாளைத் தவிர்ப்பதுடன் இதைப்பற்றி அறியாதவர்களுக்கு தெரிய படுத்தி சமுதாய சேவையாக செய்து குரு அருளையும் ,இறை அருளையும் பரிபூரணமாக நாம் பெறவேண்டும் .
நமசிவாய சிவாயநம சிவயசிவ சிவசிவ
நமசிவாய சிவாயநம சிவயசிவ சிவசிவ
நமசிவாய சிவாயநம சிவயசிவ சிவசிவ